டெல்லி: மத்திய நிதித்துறை செயலராக தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரியை நியமனம் செய்து மத்தியபணியாளர் நலத்துறை உத்தரவிட்டு உள்ளது.
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் செலவுத் துறையின் செயலராக பணியாற்றி வந்த டி.வி.சோமநாதன், தற்போது நிதித் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்., இதற்கான உத்தரவை, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
டி.வி.சோமநாதன் 1987ம் ஆண்டு ஐஏஎஸ் தமிழகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ் அதிகாரியானவர்.
நிதி அமைச்சகத்தின் அனைத்து செயலாளர்களில் மூத்த-மிக அதிகாரியாக நிதிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். டிவி சோமநாதனின் பேட்ச்மேட் டெபாசிஷ் பாண்டா நிதிச் சேவைத் துறையின் செயலாளராக உள்ளார். துஹின் காந்தா பாண்டே மற்றும் அஜய் சேத் முறையே முதலீடுகள் மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை (டிஐபிஏஎம்) மற்றும் பொருளாதார விவகாரத் துறை செயலாளர்களாக உள்ளனர்.
டிவி சோமநாதனுக்கு 2022 – 2023ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தயார் செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.