மதுரை.
மிழகத்தில் வரும் 19ந்தேதி  நடைபெற இருக்கும் இடைத்தேர்தலை ரத்து செய்ய கோரிய மனு மதுரை உயர்நீதி மன்ற கிளையால் தள்ளுபடி செய்யப்பட்டது.
மே மாதம் நடைபெற்ற 2016 சட்டசபை தேர்தலில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் பணப்பட்டுவாடா  செய்தது உறுதி செய்யப்பட்டதால்  தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மற்ற 232 தொகுதி களுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது.
madurai
அதேபோல் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சீனிவேல் மரணமடைந்ததை அந்த தொகுதியும் காலியானது. இதையடுத்து காலியாக இருந்த  3 தொகுதிகளுக்கும் வரும் நவம்பர் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமி ஆகியோர் மீண்டும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனு சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.   டில்லி உச்ச நீதிமன்றமும் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி  பிரகாஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
பணப்பட்டுவாடா நடந்ததாக கூறி மே மாதம் 2 தொகுதிகளிலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர்களே மீண்டும் போட்டியிடுவதால் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.