சென்னை; மார்ச் 14ஆம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், மார்ச் 15ந்தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளனார்.
திமுக அரசு 2021ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நிலையில், இதுவரை 3 முழு பட்ஜெட்களை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில் 4வது பட்ஜெட்டை தயாரித்து, அதை இறுதி செய்து, பேரவையில் தாக்கல் செய்ய தயராக உள்ளது.
இதனையடுத்து பட்ஜெட் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் மாதம் 14ஆம் தேதி தொடங்க உள்ளது. அன்றைய தினம் நடப்பு ஆண்டுக்கான பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றவர், இந்த பட்ஜெட் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாகவும், மானிய கோரிக்கை தாக்கல் செய்வது தொடர்பாகவும் அலுவல் ஆய்வு குழு கூடி முடிவெடுக்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இதனிடையே திமுக அரசு தாக்கல் செய்யவுள்ள கடைசி முழு பட்ஜெட் என்பதால் புதிய, புதிய சலுகைகள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும்,
மக்களைக் கவரும் திட்டங்கள், இந்த பட்ஜெட்டில்தான் முழுமையாக வெளியிட முடியும். எனவே இந்த பட்ஜெட்டை பற்றிய மக்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பெண்களுக் கான கூடுதல் திட்டங்கள், இந்த பட்ஜெட் மூலம் தீட்டப்பட வாய்ப்புள்ளது. அவர்களுக்கான நிதியுதவியை உயர்த்தி வழங்கும் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே நிதிச் சுமை மற்றும் மத்திய அரசிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காத நிலையில், இந்த பட்ஜெட் தமிழக அரசுக்கு சவாலானதாக இருக்கும், இருந்தாலும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட ஆட்சியாளர்கள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.