சென்னை:   2023 -24ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல்  செய்துவரும் நிதியமைச்சர் பல்வேறு அறிவிப்புகளையும், திட்ட ஒதுக்கீடுகளையும்  அறிவித்து வருகிறார்.

2023 -24ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியிருக்கிறது.  சட்டப்பேரவை யின் இன்றைய அலுவல்களை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.  அதனைத்தொடர்ந்து  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார். அப்போது  பட்ஜெட் உரைக்கு முன்னரே தங்களை பேச அனுமதிக்க கோரி அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.  ஆனால் தொடர்ந்து நிதியமைச்ச்ர் பட்ஜெட் உரையை வாசித்துக்கொண்டிருந்தார். இதையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இன்றைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் விவரம் வருமாறு:-

மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகம் ஜூனில் திறக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்

காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு. தமிழ்நாட்டின் 18 லட்சம் மாணவர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள்.

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 40, 299 கோடி ஒதுக்கீடு – நிதியமைச்சர்

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 40, 299 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்

54 அரசு ஐ.டி.ஐ.க்கள் திறன்மிகு தொழிற்பயிற்சி மையங்களாக மாற்றப்படும்

54 அரசு ஐ.டி.ஐ.க்கள் திறன்மிகு தொழிற்பயிற்சி மையங்களாக மாற்றப்படும். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சிப்காட் வளாகத்தில் ரூ. 80 கோடி மதிப்பில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்

ரூ. 200 கோடி செலவில் பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரிகள் மேம்படுத்தப்படும்

பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வரும் நிதியாண்டிலும் ரூ. 200 கோடி செலவில் பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரிகள் மேம்படுத்தப்படும்.

பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரிக்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 40 கோடி நிதி ஒதுக்கீடு

அனைத்து பள்ளிகளும் பள்ளி கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்படும் – நிதியமைச்சர்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் பள்ளிகள் மற்றும் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளில் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளி கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்படும்

பள்ளிகளில் பணியாற்றும் அனைவரின் பணிப்பலன்கள் பாதுகாக்கப்படும்

இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும் இந்த பள்ளிகளில் பணியாற்றும் அனைவரின் பணிப்பலன்கள் பாதுகாக்கப்படும்.

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள் ஆய்வகங்கள் கட்ட 1500 கோடி நிதி ஒதுக்கீடு

”ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வர்களுக்கு 10 கோடி நிதி உதவி”

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் குடிமைப் பணி தேர்வுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு முதல் நிலைத் தேர்வுக்கு தயாராக மாதம் ரூ.7,500 முதன்மைத் தேர்வுக்கு ரூ.25,000 உதவித்தொகை ஆண்டுக்கு 10 கோடி நிதி ஒதுக்கீடு

மருத்துவத்துறைக்கு 18,661 கோடி ஒதுக்கீடு – நிதியமைச்சர்

2023-24ஆம் ஆண்டுக்கான் பட்ஜெட்டில், மருத்துவத்துறைக்கு 18,661 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகாரஜன் அறிவித்தார்.