சென்னை: தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

வருவாய் பற்றாக்குறையை ரூ. 62,000 கோடியில் இருந்து ரூ. 30,000 கோடியாக குறைத்துள்ளோம். வரும் ஆண்டுகளில் மேலும் குறைக்கப்படும்.

மாநில அரசின் வரி வருவாய் 6.11 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்

இலங்கை மறுவாழ்வு முகாம்களில் அகதிகளக்கு வீடுகள் கட்ட ரூ. 223 கோடி ஒதுக்கீடு

தமிழ் கணினி பண்பாட்டு மாநாடு நடத்தப்படும்

வயது முதிர்ந்த மேலும் 590 தமிழறிஞர்களுக்கு இலவச பேருந்து பயணம். தமிழ் கணினி பண்பாட்டு மாநாடு நடத்தப்படும்

சென்னை சங்கமம் கலைவிழா மேலும் 8 முக்கிய நகரங்களில் விரிவு செய்யப்படும் நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க, கலைஞர்களை பாதுகாக்க ரூ. 11 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ. 40 லட்சமாக அதிகரிப்பு

போர் மற்றும் போர் சார்ந்த நடவடிக்கைகளில் உயிரிழந்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும் ரூ. 20 லட்சம் நிதியுதவி ரூ. 40 லட்சமாக அதிகரிப்பு .