சென்னை: நிதியமைச்சர் பிடிஆர் அறிவித்து வரும் பட்ஜெட் அறிவிப்புகள்…

சட்டப்பேரவையில் இன்று தொடங்கி நடந்துவரும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-2024 க்கான பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.

 சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்தாண்டு திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

தமிழக அரசு மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரியை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.

நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் போது உயிர் தியாகம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த படைவீரர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை 20 லட்சம் ரூபாயில் இருந்து இருமடங்காக உயர்த்தி 40 லட்சம் ரூபாய் வழங்கப்படும்

சென்னையில் சர்வதேச தரத்திலான புதிய விளையாட்டு மையம் அமைக்கப்படும்

சர்வதேச தரத்திலான உலகளாவிய விளையாட்டு மையம் CMDA மூலம் சென்னையில் அமைக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார்.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 30,000 கோடி வங்கிக்கடன்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 30,000 கோடி அளவில் வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… ரூ.500 கோடி ஒதுக்கீடு-18 இலட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

”மாணவர்களுக்கு மிதிவண்டி – ரூ. 305 கோடி நிதி ஒதுக்கீடு”

மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்குவதற்காக ரூ. 305 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.

உயர்கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவிகளின் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரிப்பு

உயர்கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவிகளின் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ரூ.1,500 ஆக அதிகரிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ரூ.1,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ரூ.2000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது