சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்தியஅரசுக்கு எதிராக இன்று திமுக உள்பட எதிர்க்கட்சியினர் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒரு சில இடங்களில் எதிர்ப்பை மீறி இயக்கப்பட்ட அரசு பஸ்களையும்,  ரயில்களையும் மறித்து திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்பட எதிர்க்கட்சியினர், விவசாய அமைப்புகள் மறியல் செய்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை:

சென்னை அண்ணாசாலையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட சாலை மறியல் மற்றும் பேரணி நடைபெற்றது. இதன் காரணமாக சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும், சைதைப்பேட்டை, கோயம்பேடு போன்ற பல இடங்களில் சாலை மறியல் போராட்டமும், பூங்கா நகர் ரயில் நிலையம், பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் போன்ற இடங்களிலும் ரயிலை மறித்து போராட்டம் நடைபெற்றது.

திருவள்ளுர் : பொன்னேரி ரயில் நிலையத்தில் 500-க்கும் மேற்பட்ட திமுகவினர் மறியல் போராட்டம்.

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில், தண்டவாளத்தில் அமர்ந்து திமுகவினர் ரயில் மறியல்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பட்டுசேலை கடை, ராஜாஜி மார்கெட் உள்பட அனைத்து வணிக நிறுவனங்களும் மூடல்

விழுப்புரம் : திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் பேரணி செல்லும்போது, சாலையோரம் நின்ற லாரி மீது மர்மநபர்கள் கல்வீச்சு

வேலூரில் அரசுப் பேருந்துகளை இயக்கக்கூடாது என திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

குடியாத்தம் அருகே ஆந்திராவிலிருந்து வந்த தனியார் பேருந்து மீது மர்மநபர்கள் கல்வீச்சு – கண்ணாடி உடைந்தது

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து திமுகவினர் ரயில் மறியல்.

திருச்சி

தலைமை தபால்நிலையம் பகுதியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அவர்கள் விவசாய அமைப்புகளின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஏராளமான விவசாயிகளும் கலந்துகொண்டனர்.  அவர்களை போலீசார் கைது செய்தனர்.

புள்ளம்பாடி ரயில் நிலையத்தில், சென்னையிலிருந்து திருச்சி சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து விவசாய சங்கத்தினர் போராட்டம்

லால்குடி ரயில் நிலையத்தில், சென்னை செல்லும் பல்லவன் விரைவு ரயிலை மறித்து திமுகவினர் போராட்டம்

திருவெறும்பூரில், திமுக எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ரயில் மறியல் போராட்டம்

தஞ்சை : மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம். தஞ்சை ரயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் ரயில் மறியல்.

கும்பகோணத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ அன்பழகன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது.

நாமக்கல் : ராசிபுரத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன

குமாரபாளையம் பகுதியில் 2 அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு.

 கிருஷ்ணகிரி : மோட்டூரில் 2 அரசுப் பேருந்துகளின் கண்ணாடியை மர்மநபர்கள் உடைத்தனர்

சேலம் மாவட்டத்தில் 3,000-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் அடைப்பு

ஈரோடு மாவட்டத்தில் 5,000-க்கும் மேற்பட்ட ஜவுளி நிறுவனங்கள் மூடல்; ரூ.50 கோடி வர்த்தகம் பாதிப்பு

திருப்பூர் மாவட்ட பின்னலாடை நிறுவனம் மற்றும் பாத்திர தொழிலாளர்கள் சங்கத்தினர் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்பு; ரூ.31.50 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிப்பு

தமிழக, கர்நாடக எல்லையான ஓசூரில், இரு மாநில அரசுப்பேருந்துகளும் நிறுத்தம், சத்தியமங்கலம் வழியாக இயக்கப்படும் இருமாநில அரசுப்பேருந்துகளும் நிறுத்தம்

நெல்லை மாவட்டத்தில் 95% வணிக நிறுவனங்கள் அடைப்பு பாளையங்கோட்டை காய்கறி சந்தை முழு அளவில் அடைக்கப்பட்டுள்ளது

தாமிரபரணி ரயில்வே மேம்பால தண்டவாளத்தில் அமர்ந்து திமுகவினர் போராட்டம் – 100-க்கும் மேற்பட்டோர் கைது

குமரியில் பெரும்பாலான கடைகள் மற்றும் உணவகங்கள் அடைப்பு; சுற்றுலாப் பயணிகள் தவிப்பு தமிழக-கேரள எல்லையான களியக்காவிளை மற்றும் இஞ்சிவிளை பகுதிகளில் கேரள அரசுப் பேருந்துகள் நிறுத்தம்

முழு அடைப்புக்கு ஆதரவாக பெட்ரோலிய டேங்கர் லாரி சங்கத்தினரும் வேலை நிறுத்தத்தில்  ஈடுபட்டுள்ளனர்

தமிழகத்திலிருந்து புதுச்சேரி சென்ற, 4 தமிழக அரசுப் பேருந்துகளின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர்.