சென்னை: தமிழ்நாடு சட்டப்போவை சிறப்பு கூட்டம் இன்று கூடியது. இதில் முதல் நிகழ்வாக, மறைந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் சனிக்கிழமை (நவ. 18) இன்று கூடியுள்ளது. இன்றைய கூட்டத்தில், பல்கலைக்கழகங்கள் தொடா் பாக பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்த மசோதாக்களை ஆளுநா் ஆா்.என்.ரவி திருப்பி அனுப்பிய மசோதாக்களை மிண்டும் தாக்கல் செய்து, நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இதற்கான தீா்மானங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து பேசுவாா். அதைத் தொடா்ந்து, பேரவையில் முன்வரிசையில் இடம்பெற்றுள்ள எதிா்க்கட்சித் தலைவா்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிப்பாா்கள். அதன் பிறகு, சட்டத்திருத்த மசோதாக்கள் அனைத்தும் குரல் வாக்கெடுப்பு மூலம் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. காலை 10 மணிக்குத் தொடங்கி சுமாா் 2 மணி நேரம் பேரவைக் கூட்டம் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
முன்னதாக இன்று காலை சபை கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் வேணு, வெங்கடசாமி, வேல்துரை ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதேபோன்று என். சங்கரய்யா, பங்காரு அடிகளார் ஆகியோருக்கும் இரங்கல் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு எதிரொலி: 10 மசோதாக்களை திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி…