காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகத்தில் ஒரு நாள் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 8:30 மணிக்கு புறப்படும் அவர், காலை 11.10 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருவார்.

அதன் பிறகு, 11.30 மணிக்கு ஹெலிகாப்டரில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரிக்கு சென்று, காங்கிரஸ் வேட்பாளர் துரைச்சந்திரசேகருக்கு ஆதரவாக பொதுக்கூட்டத்தில் பேசுவார்.
பின்னர், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொகுதிக்கு சென்று, வேட்பாளர் முனிரத்தினத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்வார்.
இதற்குப் பிறகு மதியம் 2.30 மணியளவில் மீண்டும் சென்னை திரும்பி, 3 மணிக்கு திருச்சிராப்பள்ளிக்கு விமானத்தில் புறப்படுவார்.
திருச்சியில், துறையூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எம். லெனின் பிரசாத்துக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ளும் அவர், மாலை 5.40 மணிக்கு திருச்சியிலிருந்து டெல்லி புறப்படுவார்.
அவரது வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மேலும், இந்த பயணத்தின் போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களை ராகுல் காந்தி சந்திக்கும் வாய்ப்பு குறைவாக உள்ளது. ஸ்டாலின் அவர்கள் வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு இருப்பதால் இந்த சந்திப்பு நடைபெறாது என கூறப்படுகிறது.
ராகுல் காந்தியின் இந்த சூறாவளி பிரச்சாரம், காங்கிரஸ் கட்சியின் ஆதரவை அதிகரிக்கும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]