சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 6 மாதங்களுக்குள் நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணியில் உள்ள பிரதான கட்சியான காங்கிரஸ் இன்று திமுகவுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது.  அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிசறது. இதன் காரணமாக, அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகள முடுக்கி விட்டுள்ளன.  தேர்தலை எதிர்கொள்ள தங்களை தயார் படுத்தி வருகின்றன இதற்காக மறைமுக கூட்டணி, ரகசிய பேச்சுவார்த்தை, அரசியல் பேரங்கள் தொடங்கிவிட்டன. . அனைத்து கட்சிகளும் தங்கள் செல்வாக்கைக் காட்டி பேரங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியே, சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  சட்டசபை தேர்தலில்  காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடரும் என தலைமை ஏற்கனவே அறிவித்து உள்ளத. இதைடுத்து,  கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு  தொடர்பாக தி.மு.க.-காங்கிரஸ் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் கே.எஸ்.அழகிரி உள்பட மூத்த நிர்வாகிகள்  இன்று சந்தித்து பேச இருப்பதாகவும்,  2021 சட்டசபை தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து மு.க.ஸ்டாலினுடன் இன்று முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.