சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்ற வருகிறது. காலையில் இருந்த சுறுசுறுப்பு படிப்பபாக குறைந்து, மாலை 3 மணி நிலவரப்படி 53.35% வாக்குகளே பதிவாகி உள்ளது.
‘
தமிழக சட்டமன்றத்துக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 234 சட்டமன்ற தொகுதிகள் உள்பட குமரி நாடாளுமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
காலை 9 மணி நேர நிலவரப்படி 13.80 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், காலை 11 மணி நிலவரப்படி 26.29 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
மதியம் 1 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 39.61 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது. இது மற்ற மாநிலத்துடன் ஒப்பிடும்போது சுமார் 10 சதவிகிதம் குறைவாகவே பதிவாகி இருந்தது.
இந்த நிலையில், மதியம் 3 மணி நிலவரப்படி, 53.35% வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 மணி நேரம் உள்ள நிலையில், வாக்குப்பதிவு 75 சதவிகிதத்தை எட்டுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் வாக்குப்பதிவு விகிதம் வெகுவாக குறைந்து காணப்படுவது மக்களிடையே அரசியல் கட்சிகள் மீதான அதிருப்தியை வெளிப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.