சென்னை,
மிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இன்றுமுதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர விண்ணப்பம் இன்று முதல் வழங்கப்படும் என்று  மருத்துவக்கல்வி கூடுதல் இயக்குனர்  தெரிவித்து உள்ளார்.
clinical-trials-microscope
2016–2017–ம் ஆண்டுக்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் மற்றும் பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் கிண்டியில் உள்ள கிங் நோய்த்தடுப்பு நிலையத்தில் இன்று(வியாழக்கிழமை) முதல் வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் டிசம்பர் 2–ந் தேதி வரை வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை செயலாளர், தேர்வுக்குழு, மருத்துவ கல்வி இயக்குனரகம், கீழ்ப்பாக்கம், சென்னை –10 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.
விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசி நாள்  டிசம்பர் 3–ந் தேதி.
மேலும் விண்ணப்பங்களை இணையதளத்தில்(www.tnhealth.org ) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த தகவலை மருத்துவக்கல்வி கூடுதல் இயக்குனர் டாக்டர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.