ஈரான் எண்ணெய் கப்பலில் இருந்த தமிழர் உள்பட அனைவரும் விடுதலை

Must read

பிரிட்டன்:

ரான் எண்ணெய் கப்பலில் இருந்த தமிழர் உள்பட இந்திய மாலுமிகள் மற்றும் அனைவரும் சுதந்திர தினமான நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.   ஜிப்ரால்டரில் கைது செய்யப்பட்ட அவர்களை அந்நாட்டு நீதி மன்றம் விடுவித்து உள்ளது.

கடந்த ஜூலை மாதம் பிரிட்டனுக்குச் சொந்தமான ஜிப்ரால்டர் அருகே கைது செய்யப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பலில் இருந்த கப்பல் கேப்டன் மற்றும் மாலுமிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட அனைவரும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது

சிரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு ஈரான் எண்ணெய் கப்பல் ரோஸ் 1 சென்று கொண்டி ருந்தபொழுது அதனை மடக்கி  ஜிப்ரால்டர் போலீசார் கைது செய்தனர். அந்த கப்பலில் இருந்த இந்தியர்கள் உள்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர். அந்தக் கப்பலில் பனாமா கொடி பறக்க விடப்பட்டிருந்தது.

முடக்கப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பலில் கேப்டன் ,தலைமை நிர்வாகி, இரண்டு துணை மாலுமி கள் இந்தியர்கள். இவர்கள் மீது ஜிப்ரால்டரில் விசாரணை நடந்தது. விசாரணைக்குப்பின் ஆகஸ்ட் 15ம் தேதி (நேற்று) 4 இந்தியர்கள் உள்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களில் நாமக்கல்லை சேர்ந்த நவீன்குமார் ஜீவானந்தம் என்ற 23 வயது இளைஞரும் ஒருவர்,

இதற்கிடையில், ஈரான் எண்ணெய் கப்பலை தன்வசம் ஒப்படைக்கும்படி அமெரிக்கா கோரி யுள்ளது. அமெரிக்காவின் கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக ஜிப்ரால்டர் நீதிமன்றம் உறுதி அளித்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த நவீன்குமார் முருகானந்தம் விடுதலை செய்யப்பட்டது குறித்து கூறிய அவரது தாயார்  கலைமணி,  “நவின்  என்னிடம் வாட்ஸ்அப்பில், தான் விடுவிக்கப்பட்டதைப் பற்றி  தெரிவித்தார்.” என்று கூறியவர்,  தனது மகனை விடுவிக்க முயற்சித்த மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

விடுதலைகுறித்து தெரிவித்துள்ள  கிரேஸ் 1 இன் கேப்டன், “‘எனது விடுதலையை எளிதாக்கிய அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று கூறி உள்ளார்.

More articles

Latest article