கலிபோர்னியா:
மிழ் எல்லோரையும் வாழவைக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கலிபோர்னியாவில் வட அமெரிக்கா தமிழ் சங்கப் பேரவையின் 36வது தமிழ் பெருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆற்றிய உரையில்மொழி – எழுத்தாக இல்லாமல் ரத்தமாக உள்ளது என்றும், தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுகளுக்கு ஊக்கமளிக்கும் அரசாக அமைந்துள்ளது என்றார்

தொடர்ந்து பேசிய அவர், நாட்டிலேயே அதிகளவில் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது தமிழகத்தில்தான்.

சிவகளை வாழ்விட பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வு செய்தபோது அங்கே செங்கல் வடிகாலில் தண்ணீர் சென்றுள்ளது. கீடியில் சேகரிக்கப்பட்ட மண மாதிரிகளை ஆய்வு செய்தபோது அங்கே நெல் மணிகள் பயிரிடப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளது.தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது அறிவியல்பூர்வ ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. பார் முழுவதும் சென்று கொடிநாட்டிய தமிழரின் சிறப்பை காண வருகை தர வேண்டும். தொன்மைத் தமிழரின் பெருமை என்ற தலைப்பில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மொழி எப்போதும், எல்லோரையும் வாழவைக்கும். மொழியின் பெயரை பெயராக வைப்பதில் தமிழர்கள் முன்னோடி. தமிழ் மொழி என்பது நம்மை பொருத்தவரை எழுத்தாக இல்லாமல் ரத்தமாக உள்ளது. அதனால்தான் நாம் தமிழ் என்றால் உணர்ச்சிவசப்படுகிறோம். கடல் கடந்து வந்த பிறகும் தமிழ் மொழிக்காக விழா எடுக்கிறார்கள் தமிழர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.