சான்பிரான்சிஸ்கோ:
மிழ் மொழி அச்சுறுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நடந்த கலந்துரையாடலில், தமிழர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ராகுல் காந்தி பதில் அளித்த ராகுல் காந்தி, எந்த பிராந்திய மொழிகள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதை அனுமதிக்க முடியாது. எந்த மொழி மீதும் தாக்குதல் நடத்துவது, அது இந்தியா மீதான தாக்குதலுக்கு சமம். தாங்கள் தாக்கப்படுவதாக இஸ்லாமியர்கள் நினைக்கின்றனர்.

அதேபோன்றே, சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்களும் நினைக்கின்றனர். இஸ்லாமியர்களுக்கு இன்று இந்தியாவில் என்ன நடக்கிறதோ, அது 1980 களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு நடந்தது. ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படுவது முக்கியம். ஆனால், இதற்கு பா.ஜ., அனுமதிக்காது. தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் சமமாக நடத்தப்பட வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இதனை செய்வோம். அனைவரும் சமமாகவும், நேர்மையாகவும் வாழ்வதற்கான நாடாக இந்தியாவை மாற்றுவோம் என்றார்.