சிங்கப்பூர்:
டந்த 2016 ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை 66 தங்க நகைகளை 172க்கும் மேற்பட்ட முறை அடமானம் வைத்து 2,328,760 சிங்கப்பூர் வெள்ளியை அடமானத் தொகையாக பெற்றுள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தலைமை அர்ச்சகராக பணியாற்றி வருபவர் கந்தசாமி சேனாபதி. இந்தியாவை சேர்ந்த அவரிடம் இந்து அறக்கட்டளை வாரியத்திற்கு கீழ் உள்ள ஸ்ரீமாரியாம்மன் கோயிலில் சேனாபதி கடந்த 2013ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்தார்.

இந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவருக்கு கோயிலின் தலைமை அர்ச்சகராக பதவி உயர்வு கிடைத்தது. 2014ஆம் ஆண்டிலேயே சேனாபதியிடம் சிங்கப்பூர் நாணய மதிப்பில் 1.1 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள 255 தங்க நகைகளை அவரது பொறுப்பில் கோயில் நிர்வாகம் ஒப்படைத்தது.

முக்கியமான நாட்களில் கோயிலில் பூசைகள் தொடங்கும் போது அந்த நகைகள் ஆலயத்தில் உள்ள தெய்வங்களுக்கு அணிவிக்கப்படுவது வழக்கம்.

கடந்த 2016 ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை 66 தங்க நகைகளை 172க்கும் மேற்பட்ட முறை அடமானம் வைத்து 2,328,760 சிங்கப்பூர் வெள்ளியை அடமானத் தொகையாக பெற்றுள்ளார்.

அலயத்தின் அறக்கட்டளை நிவாகம் தணிக்கை செய்யும் போதெல்லாம் அடமானம் வைத்த நகைகளை மீட்டு கணக்கில் காட்டுவதை சேனாபதி வழக்கமாக கொண்டுள்ளார்.

2020ஆம் ஆண்டு நடந்த தணிக்கையில் கோயில் நகைகளை அடமானம் வைத்தது நிர்வாகத்திற்கு தெரியவந்த நிலையில் அதனை சேனாபதி ஒப்புக்கொண்டார்.

அதன் பின்னர் ஜூலை 29ஆம் தேதி சேனாபதி மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. அர்ச்சகர் தான் அடமானம் வைத்டஹ் 66 நகைகளையும் ஒப்படைத்துவிட்டார், அதில் கோயில் நிர்வாகத்திற்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தலைமை அர்ச்சகர் சேனாபதிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.