10 நாள் பயணமாக அமெரிக்க சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சான் ப்ரான்சிஸ்க்கோ நகரில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, “இந்தியா பல்வேறு மொழிகள் மற்றும் மதங்களை உள்ளடக்கிய பன்முகத்தன்மை கொண்ட நாடு. குருநானக் மற்றும் காந்திஜி ஆகியோர் பேணிக்காத்த பாரம்பரியம் இப்போது தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.

இந்தியாவில் உள்ள சில குழுக்கள் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்பில் ஒரு விதமான மன நோயுடன் செயல்படுகிறது.

மோடி பக்கத்தில் கடவுள் அமர்ந்தால் பிரபஞ்சம் எப்படி செயல்படுகிறது என்பதை கடவுளுக்கே விளக்கிவிடுவார்.

தவிர, தான் படைத்தது என்ன என்பதில் கடவுளே மலைத்துப்போகும் அளவுக்கு செய்து விடுவார்” என்று ராகுல் காந்தி பேசினார்.