வைரலாகும் ஹர்பஜன் சிங் பாடிய தமிழ் ‘கானா’: தமிழக ரசிகர்கள் உற்சாக வரவேற்பு….

Must read

ந்த ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் நடைபெற்று வருகிறது. இன்று 8வது லீக் போட்டி நடைபெறு கிறது.

ஏற்கனவே ஆடிய இரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள சிஎஸ்கே அணி வரும் 31ந்தேதி சென்னை ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

இந்த நிலையில், சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங், தமிழில் அழகான கானா பாடல் ஒன்றை முதன் முறையாக பாடி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அன்பால் நிறைந்த ஆனந்தங்கள் ஆயிரம், அதற்கு எல்லைகள் ஏதும் இல்லை என்பதற்கு இதுவே உதாரணம்.என் தமிழ் மக்களுக்காக முதல் பாட்டு.இது சும்மா டிரெய்லர் தான்மா இன்னும் மெயின் பிக்சர பார்க்கலயே.நான் அவிழ்த்துவிடும் பாட்டுல பல விசிலு சத்தம் காதுல ….கேளு கேளு இது கானா பாட்டு

என்று ஹர்பஜன் பாடும் பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சிஎஸ்க்கே அணி வீரரான ஹர்பஜன் சிங் அவ்வப்போது தமிழில் டிவிட் போட்டு தமிழக மக்களிடையே பிரபலமானவர்.  ஏற்கனவே  ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது தமிழக மக்களை உற்சாகப்படுத்தி அவர் டிவிட் முதல், அவ்வப்போது தமிழக கிரிக்கெட் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி அவர் போட்ட டிவிட் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், தமிழில் கானா பாடல் ஒன்றை பாடி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காததால் அவரை பாராட்டி வருகின்ற்னர்.

More articles

Latest article