ஐபிஎல்-2019: வார்னர் அதிரடியால் சன் ரைசர்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Must read

ஐதராபாத்:

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டு வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்றைய 8வது லீக் ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. நேற்றைய ஆட்டம்  ராஜஸ்தான் ராயல்ஸ் – ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள்  இடையே நடைபெற்றது.

ஐதராபாத் அணியில் ஷகிப் அல்-ஹசன், தீபக் ஹூடா நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக காயத்தில் இருந்து தேறிய கேப்டன் கேன் வில்லியம்சன், ஷபாஸ் நதீம் ஆகியோர் சேர்க்கப் பட்டனர்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் முதல் சதம் அடித்த மஞ்சு சாம்சன்

‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி ஜோஸ் பட்லரும், ரஹானேவும் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர்.  பட்லர் 5 ரன்னில் ரசிகர்களை ஏமாற்றிவிட்டு வெளியேற, சிறிது நேரத்தில் ரஷித் கானின் கிளின் போல்டு ஆனார்,. அடுத்து ரகானே சாம்சன் ஜோடி அருமையாக கலக்கியது. இருவரும் அபாரமாக ஆடினர். முதல் 50 ரன்களை 8வது ஓவரிலும், 100 ரன்களை 12வது ஓவரிலும் இருவரும் எட்டினர்.

அதன் பிறகு ரன்வேகத்தை இருவரும் தீவிரப்படுத்தினர். நதீம், சித்தார்த் கவுல் ஓவர்களில் சாம்சன் சிக்சரை பறக்க விட்டார். ரஹானேவும்  பந்துகளை நாலாபுறமும் விரட்டியடித்தார். 11.5 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 100 ரன்களை தொட்டது. சன் ரைசர்ஸ் பவுலர் கள்  ரகானே, சாம்சன் ஆகியோரை பிரிக்க முயற்சி செய்தும் முடியாத நிலையில், இருவரும் அரை சதத்தை தாண்டினர். அணியின் ஸ்கோர் 134 ரன்களாக இருந்த போது ரகானே ஆட்ட மிழந்தார். அவர்  70 ரன்கள் எடுத்திரந்தார்.  அடுத்து ஸ்டோக்ஸ் களமிறங்கினார். அவரும் சாம்சனும் இணைந்து அதிரடி ஆட்டத்தை காட்டினார். இந்த ஆட்டத்தில் சாம்சன் முதல் சதத்தை எட்டினார்.

18வது ஓவரில் ஐதராபாத் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் வீசிய பந்தில் ரன்மழை பொழிந்தது. 1 சிக்சர், 4 பவுண்டரி என மொத்தமாக 24 ரன்கள் கடைத்தது.  இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது. சாம்சன் (102), ஸ்டோக்ஸ் (16) அவுட்டாகாமல் இருந்தனர்.

இதையடுத்து 199 ரன்கள் இலக்குடன் சன் ரைசர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் இறங்கினர்.

முதல் பந்திலேயே பவுண்டரி விளாசி ஆட்டத்தை விறுவிறுப்பாக தொடங்கிய சன் ரைசர்ஸ் அணி, தொடந்து பந்துகளை அடித்து துவம்சம் செய்தது.  ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஓவர்களில் பவுண்டரிக ளாக அனுப்பி ஸ்கோர்களை மளமளவென உயர்த்தினர்.

வார்னர் அதிரடி

9.4 ஓவரில் 110 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வார்னர் ஆட்டமிழந்தார். அவர் 37 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்சர் என அடித்து வெற்றிக்கு அடித்தளமிட்டார். இதையடுத்து, பேர்ஸ்டோவும் வெளியேற  (45 ரன், 28 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), தொடர்ந்து கேப்டன் வில்லியம்சன் களமிறங்கினார். ஆனால், அவர் 14 ரன்னிலும், விஜய் சங்கர் 35 ரன்களிலும் (15 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்), மனிஷ் பாண்டே ஒரு ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்.

ஐதராபாத் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 201 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஷித் கான் (15 ரன்), யூசுப் பதான் (16 ரன்) களத்தில் இருந்தனர்.

2-வது ஆட்டத்தில் ஆடிய ஐதராபாத் அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். ராஜஸ்தான் அணிக்கு 2-வது தோல்வியாகும்.

More articles

Latest article