வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் – விஷால்

Must read

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் விஷால் அறிவித்துள்ளார்.

hal

மே மாதம் 30-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பவதாக அறிவித்த திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது.

திரையரங்கு கட்டண முறையில் மாற்றம், திருட்டு விசிடி ஒழிப்பில் காவல் துறையில் சிறப்பு குழு அமைத்தல், தொலைத்தூர பேருந்துகளில் புதிய படம் திரையிடுதலை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தயாரிப்பாளர் சங்கம் முன் வைத்தது.

இந்த கோரிக்கைகள் மீது ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், மே 30-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்து இருந்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.
அவர் அறிவித்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதில்லை என்று திரைத்துறையின் பிற சங்கங்கள் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article