இயக்குநர் ஷங்கரிடம் ‘ஐ’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் அருண் பிரசாத். ஜி.வி. பிரகாஷை நாயகனாக வைத்து ‘4G’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
ஊரடங்கின் காரணமாக மேட்டுப்பாளையம் அருகில் இருக்கும் அன்னூரில் இருந்தார் அருண். இன்று (15.05.20) காலை தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் எதிர்ப்புறம் வந்த டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே அருண் உயிரிழந்தார்.
அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.