டெல்லி: சென்னை வந்துசெல்லும் பயணிகள் விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிட மத்திய அமைச்சர் ஹர்தீப் புரி அறிவுறுத்தி உள்ளார்.
பிரிட்டன், ஜெர்மன், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என பல நாடுகளில் விமானங்களில் உள் அறிவிப்புகள் தமிழில் தான் செய்யப்படுகின்றன.
சென்னை விமான நிலையத்தில் அந்த நடைமுறை இல்லாமல் இருந்தது. இது குறித்து பலமுறை மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அது நிறைவேறவில்லை.
இந் நிலையில் சென்னை வந்துசெல்லும் பயணிகள் விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது இது குறித்து, தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜனுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் புரி கடிதம் எழுதியுள்ளார்.
அதில் தமிழில் அறிவிப்பு வெளியிட விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாக மத்திய அமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் இந்த அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.