20வது மாநகராட்சியாக உருவானது தாம்பரம்

Must read

சென்னை:
தாம்பரம் 20வது மாநகராட்சியாக உருவானது.

தாம்பரத்தை மையமாகக் கொண்டு அருகில் உள்ள பகுதிகளை இணைத்து புதிய மாநகராட்சியை உருவாக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.

தாம்பரம் மாநகராட்சி குறித்த அறிவிப்பு சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட நிலையில், அதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி வெளியிட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக தாம்பரம் உள்ளிட்ட 5 நகராட்சிகள், சிட்லபாக்கம் உள்ளி்ட்ட 5 பேரூராட்சிகள் மட்டுமே இணைக்கப்படுகின்றன.

இனிலைஇய்ல, தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என ஏற்கனெவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தனி மாநகராட்சியாக அறிவித்து தமிழ்நாடு அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இதையடுத்து தாம்பரம் மாநகராட்சி உடனடியாக செயல்பாட்டுக்கு வருகிறது.

More articles

Latest article