விரைவில் தனக்கு திருமணம் என ஒப்புக்கொண்டுள்ளார் தமன்னா…!

Must read

கடந்த 13 அண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா.

தமன்னா குறித்து அவ்வபோது காதல் கிசுகிசுக்களும் வருவது வழக்கமான ஒன்று தான் .
பிரபல நடன இயக்குநரும் நடிகர் கம் இயக்குநரான ஒருவருடன் தமன்னா கிசுகிசுக்கப்பட்டார். ஆனால், அதை தமன்னா மறுத்தார்.

இந்த நிலையில், தமன்னா ஒருவரை காதலிப்பதாகவும், தற்போது அவருடன் டேட்டிங்கில் இருப்பவர், அவரை தான் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதையும் தமன்னா மறுத்துள்ளார்.

தொடர்ந்து காதல் பற்றிய செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து வரும் தமன்னா, இந்த முறை காதலுக்கு மறுப்பு தெரிவித்தாலும், கல்யாணம் குறித்த செய்தியை வெளியிட்டுள்ளார்.

விரைவில் தனக்கு திருமணம் நடைபெற இருப்பது உண்மை தான் , ஆனால், அது காதல் கல்யாணம் இல்லை , பெற்றோர்கள் பார்க்கும் நபரை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என கூறியுள்ளார் தமன்னா.

More articles

Latest article