மாஸ்டர் படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தளபதி 65 பற்றிய தகவல்களும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது .

ஏ. ஆர்.முருகதாஸ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக எஸ் தமன் பணியாற்ற உள்ளார்.

இது மட்டும் தான் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கும் தகவல்.

இந்நிலையில் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் வேகமாக பரவி வரும் தகவல் என்னவென்றால் தளபதி 65 படத்தின் ஹீரோயினாக தமன்னா நடிக்க உள்ளார் என்பது தான்.

தளபதி 65 படத்திற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவருடன் பேச்சு வார்த்தையில் இருப்பதாக கூறப்படுகிறது. சுறா உட்பட தமன்னா நடித்த 5 படங்களை சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.