காபூல்

ரு செய்தி நிறுவன தொகுப்பாளரைப் பெண் என்பதால் பணி செய்ய விடாமல் தாலிபான்கள் வீட்டுக்கு திருப்பி  அனுப்பி உள்ளனர்.

இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கமான தாலிபான் கைகளில் ஆப்கானிஸ்தான் நாட்டின் சென்றுள்ளது. பெண்களுக்கு தாலிபான்கள் ஆட்சியில் எப்போதும் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அது இப்போதும் தொடர்கிறது. ஆப்கானிஸ்தானில் பெண்கள் சுதந்திரமாக வெளியே செல்லும் சூழல் மீண்டும் கேள்விக்குறியாகி இருக்கிறது.  தாலிபான்கள் இஸ்லாமிய சட்டப்படி பெண்கள் உரிமை மதிக்கப்[படும் எனத் தெரிவித்தது.

ஆப்கான் நாட்டின் செய்தி நிறுவன தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகப் பணி புரிபவர் ஷப்னம் தவ்ரான். இப்போது தொலைக்காட்சி நிறுவனம் தாலிபான்கள் வசம் வந்துள்ளது. வழக்கம் போல் ஷப்னம் வழக்கம்போல தன்னுடைய பணியைச் செய்வதற்காக அலுவலகம் வந்துள்ளார். தாலிபான்கள் அவரைத் தடுத்து நிறுத்தி “நீ ஒரு பெண் வீட்டுக்குச் செல்” எனக் கூறியுள்ளனர். மேலும் “ஆட்சி மாறிவிட்டது இனி இதுதான் கட்டளை” எனவும் தெரிவித்துள்ளனர்.

ஷப்னம் வேறு எதுவும் செய்வதறியாமல் வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.  அவர் இதுகுறித்து, “நான் அரசு நடத்தும் செய்தி நிறுவனமான ஆர்டிஏ பாஷ்டோவில் வேலை செய்கிறேன். காலையில் நான் என் அலுவலகத்திற்குச் சென்றேன். தாலிபான்கள் என்னை வேலைக்கு வர வேண்டாம் என்று சொன்னார்கள். நான் என்ன காரணம் என்று கேட்டேன்.  அவர்கள் விதிகள் இப்போது மாறிவிட்டன, பெண்கள் இனி ஆர்டிஏவில் வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை என்று கூறினர்.

தாலிபான்கள் பெண்கள் படிப்பதற்கும் வேலைக்குச் செல்வதற்கும் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்தபோது, நான் உற்சாகமடைந்தேன். தற்போது நான் என் அலுவலகத்தில் யதார்த்தத்தை அனுபவித்தேன், அவர்கள் பெண்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறினார்கள்.

எனது அடையாள அட்டையை அவர்களிடம் காண்பித்தேன். ஆனாலும் அவர்கள் என்னை வீட்டிற்குச் செல்லுமாறு கூறினர்  மேலும்  ஆர்டிஏவில் பெண்கள் இனி வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அவர்கள் தெளிவாகக் கூறினர்.  எனக்கு ஏதேனும் ஆதரவு கிடைத்தால், நான் ஆப்கானிஸ்தானில் இருந்து கிளம்பிவிடுவேன்.” என்று தெரிவித்துள்ளார்.