காபூல்

ப்கான் இளம் கால்பந்து வீரர் சாக்கி அன்வாரி தப்பிச் சென்ற போது அமெரிக்க விமானத்தில் இருந்து விழுந்து உயிர் இழந்துள்ளார்.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதால் அங்கிருந்து பலர் தப்பி ஓடுகின்றனர்.    பல வெளிநாடுகள் ஆப்கானில் உள்ள தங்கள் நாட்டினரைத் திரும்ப அழைத்து வர விமானங்களை இயக்குகின்றன.  அதில் ஆப்கான் நாட்டை சேர்ந்தவர்களும் ஏறித் தப்ப முயற்சி செய்து வருகின்றனர்.  இவர்கள் விமானங்களில் முண்டியடித்து ஏற முயல்கின்றனர்.

கடந்த திங்கள்கிழமை அன்று அமெரிக்கப் படை விமானம் கிளம்பிய போது பலரும் அதில் முண்டி அடித்து ஏற முயற்சி செய்துள்ளனர்.   விமானம் கிளம்பிய பிறகும் அதில் தொற்றிக் கொள்ளவும் இறக்கையில் ஏறவும் சக்கரத்தைப் பிடிக்கவும் பலர் முயன்ற காட்சிகள் காணொளியாக வெளியாகியது.  அப்போது இருவர் விமானத்தில் இருந்து விழுந்து இறந்தது காணொளியில் தெரிய வந்தது.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இளம் கால்பந்து வீரரான சாக்கி அன்வாரி அவ்வாறு விமானத்தில் இருந்து விழுந்து மரணம் அடைந்ததாக தற்போது தெரிய வந்துள்ளது.  சாக்கி அன்வாரி ஆப்கானிஸ்தான் தேசிய கால்பந்து அணியைச் சேர்ந்த 19 வயது வீரர் ஆவார்.  இவர் மரணத்தை அந்நாட்டு விளையாட்டு ஆணையம் உறுதி செய்துள்ளது.   அவரது உடல் பாகங்கள் விமானத்தில் இருந்து கிடைத்துள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.