கந்தகார்

ஆப்கனிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரான கந்தகார் நகரைத் தாலிபான்கள் கைப்பற்றி இதுவரை 12 நகரங்களைக் கைப்பற்றி உள்ளனர்.

தாலிபான்கள் அடுத்தடுத்து ஆப்கானிஸ்தானின் பெரிய நகரங்களை கைப்பற்றி வருகின்றனர். இதுவரை ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களில் 12 மாகாண தலைநகர்களைத் தாலிபான்கள் கைப்பற்றி உள்ளனர்.  குறிப்பாக இந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரான கந்தகார் மற்றும் முன்ன்றம பெரிய நகரான ஹீரத் நகர் ஆகியவை தாலிபான்கள் வசம் உள்ளன.

இதையடுத்து அங்குள்ள அமெரிக்கப் படைகள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச்  சந்தித்த பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, காபூலில் இருந்து அமெரிக்கத் தூதரக அதிகாரிகள், ஊழியர்sகள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

பிரிட்டனும் தங்கள் நாட்டு மக்களைப் பாதுகாப்பாக அழைத்து வர 600 ராணுவ வீரர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஷரியத் சட்டத்தை அமல்படுத்தி கொடூரச் செயல்களில் தாலிபான்கள் ஈடுபடலாம் என்ற அச்சத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை காலி செய்து, வேறு நகரங்களுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர்.