பெற்றோரை பாதுகாக்க பள்ளிகளில் பாடம்: செங்கோட்டையன்

கோவை :

பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘பெற்றோரை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடமாக கொண்டு வரப்படும்.

10, 11, 12ம் வகுப்புகளில் அனைத்து பாடங்களும் கணினி மயமாக்கப்படும். மாணவர்கள் மனஅழுத்தம் இன்றி தேர்வு எழுத வைப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது’’ என்றார்.


English Summary
taking care about parents will teach in schools tamilnadu education minister sengottaiyan told media