இரு அணிகள் இணைய வாய்ப்பே இல்லை : ஓபிஎஸ்

சிலம்பட்டி : தேனி மாவட்டம்

சிலம்பட்டி வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “அதிமுக.,வின் இரு அணிகளும் இணைய இனி வாய்ப்பே இல்லை”என்று உறுதிபட தெரிவித்தார்.

மேலும், “அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம். குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவு அளித்தது குறித்து சிலர் விமர்சிக்கிறார்கள். , ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் என்ன முடிவு எடுத்து இருப்பாரோ அந்த முடிவை தான் நாங்கள் எடுத்திருக்கிறோம்.

தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரும் என தி.மு.க., செயலாளர் ஸ்டாலின் கூறியிருப்பது, அவரது தனிப்பட்ட கருத்து” என்றும் ஓ.பி.எஸ். தெரிவித்தார்.

“அதிமுகவில் பிளவு என்பது கிடையாது. இரு அணிகளும் விரைவில் இணையும்” என்று இரு நாட்களு்க்கு முன் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்த நிலையில், இணைப்பே கிடையாது என ஓ.பி.எஸ். கூறியிருப்பது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: OPS states that there is no chances for alligning of two factions in ADMK