கார் மரத்தில் மோதி டி.எஸ்.பி பலி

அருப்புக்கோட்டை:

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்தனர் வெற்றிவேல். இவர் இன்று அருப்புக்கோட்டை பாலவனத்தம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது கார் எதிர்பாராதவிதமாக அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியது. இதில் படுகாயமடைந்த வெற்றிவேல் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


English Summary
viruthunagar thiruchuzhi dsp killed in car accident