டில்லி

தாஜ்மகாலுக்கு உலகின் மிகப் பாரம்பரியமான கட்டிடங்களில் இரண்டாவது இடத்தை யுனெஸ்கோ அளித்துள்ளது.

சமீபத்தில் யுனேஸ்கோ சுற்றுலா மையங்கள் குறித்த கணக்கெடுப்பு ஒன்றை நிகழ்த்தியது.   அதில் உலகின் பாரம்பரியாமான கட்டிடங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி உள்ளது.  இந்த கணக்கெடுப்பு  அந்த இடங்களைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளின் அடிப்படையில் நடத்தி உள்ளது.

அதில் தாஜ்மகாலுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.  கம்போடியாவில் உள்ள அங்கர் வாட் கோவிலுக்கு முதல் இடம் கிடைத்துள்ளது.  முழுக்க முழுக்க சலைவக் கற்களால் கட்டப்பட்ட இந்த தாஜ்மகால் முகலாய மன்னன் ஷாஹகானால் அவர் மனைவி மும்தாஜ் மகால் நினைவாக கட்டப்பட்டுள்ளது.   இந்த கட்டிடத்தினுள் மும்தாஜ் மற்றும் ஷாஜகான் சமாதி உள்ளது.   தாஜ் மகாலுக்கு வருடத்துக்கு சுமார் 80 லட்சத்துக்கு மேல் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.