- Advertisement -spot_img

TAG

take

ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு – சத்தீஸ்கர் முதல்வருடன் சோனியா காந்தி ஆலோசனை

புதுடெல்லி:  கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்து  சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தியுள்ளார். இதுகுறித்து வெளியான தகவலின் படி, இந்த ஆலோசனையின் போது, இருவரும்  கொரோனா  மூன்றாவது அலை மற்றும் அதன் மாறுபாடு ஒமைக்ரான் சாத்தியம் குறித்து விரிவான விவாதத்தை நடத்தியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. மேலும்...

ஜாவத் புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்குப்  பிரதமர் மோடி உத்தரவு

புதுடெல்லி: ஜாவத் புயல் பாதிப்பிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜாவத் சூறாவளி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  குறித்து டெல்லியில்  உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது....

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய வெற்றி

ஜெய்ப்பூர்:  நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 164  ரன்கள் எடுத்தது. 165 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு...

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகிறார் வி.வி.எஸ்.லட்சுமணன் 

பெங்களூரு:  தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக வி.வி.எஸ். லட்சுமணன் நியமிக்கப்பட உள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளர் ஆனதால், முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேன் வி.வி.எஸ். லட்சுமணன், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறியுள்ளார். இதையடுத்து...

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு:  ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் 

சென்னை: மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 18.10.2021 அன்று மீன்பிடிக்கச் சென்ற...

ஊழல் வழக்குகளில் சிக்குபவர் மீது நடவடிக்கை எடுக்காத உயர் அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கக் கூடாது: உயர்நீதிமன்றம்

சென்னை: ஊழல் வழக்குகளில் சிக்குபவர் மீது நடவடிக்கை எடுக்காத உயர் அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கக் கூடாது  என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாஸ்கர் என்பவர் ரூ 1,500 லஞ்சம் பெற்ற வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு...

தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய நாளை லக்னோ பயணமாகிறார் பிரியங்கா காந்தி

புதுடெல்லி:  தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்யக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நாளை லக்னோ பயணமாகிறார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா நாளை மாலை முதல் ஒரு வாரம் லக்னோவுக்கு வந்து மாநிலத்தில் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்கிறார். காங்கிரஸ் தலைவர்கள்...

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் – காங்கிரஸ் சமூக ஊடகத் துறை தீர்மானம் 

புதுடெல்லி:  காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் சமூக ஊடகத் துறை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சமூக ஊடகத் துறையின் நாடு தழுவிய அதிகாரப்பூர்வ கூட்டமான "த்ரிஷ்டி 2021" கூட்டத்தில்  ராகுல் காந்தி கலந்து...

உத்தரப்பிரதேச தேர்தல்: “ப்ரதிஜ்யா யாத்திரை” நடத்தக் காங்கிரஸ் முடிவு 

உத்தரப்பிரதேசம்:  உத்தரபிரதேச தேர்தலை முன்னிட்டு "ப்ரதிஜ்யா யாத்திரை" நடத்தக் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.  உத்தரப்பிரதேச தேர்தல் குறித்து பிரியங்கா காந்தி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கு அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலைச் சந்திக்க அனைத்துக் கட்சிகளும் தயாராகி...

பா.ஜ.கவினர் எப்போதுமே ஒவ்வொரு விஷயங்களிலும் பல நிலைப்பாடு எடுக்கக்கூடியவர்கள் – கனிமொழி எம்.பி

தூத்துக்குடி: பா.ஜ.கவினர் எப்போதுமே ஒவ்வொரு விஷயங்களிலும் பல நிலைப்பாடு எடுக்கக்கூடியவர்கள் என்று கனிமொழி எம்.பி கடுமையாக சாட்டியுள்ளார். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளை துவக்கி...

Latest news

- Advertisement -spot_img