நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்த “பின்க்” திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலம் அடைந்தார் நடிகை டாப்சி.

நடிகை டாப்சி நடிப்பில் அடுத்ததாக ஹஸீன் தில்ருபா என்ற புதிய பாலிவுட் திரைப்படம் வெளிவரவுள்ளது.

ஆனந்த் எல் ராய் தயாரிக்கும் ஹஸீன் தில்ரூபா திரைப்படத்தை இயக்குனர் அமித் திரிவேதி இயக்குகிறார். நடிகை டாப்ஸி உடன் இணைந்து விக்ரண்ட் மஸ்சே, ஹர்ஷவர்தன் ராணே நடித்துள்ளனர்.

முன்னதாக திரைப்படம் நேரடியாக NETFLIX OTT தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஹஸீன் தில்ரூபா திரைப்படத்தின் டீசர் & ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் ஹஸீன் தில்ரூபா படத்தின் அதிரடியான புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. வருகிற ஜூலை 2ஆம் தேதி NETFLIX OTT தளத்தில் ஹஸீன் தில்ரூபா திரைப்படம் வெளியாக உள்ளது.

https://youtu.be/Xewt1I1RSgg