சென்னை: சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 25ந்தேதி இந்தியா இங்கிலாந்துக்கான டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதால், அன்றைய தினம் ரயில்சேவையில் சில மாற்றங்கள் செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் விளையாட்டுத் திடலில் வரும் 25-ஆம் தேதி (சனிக்கிழமை) இந்தியா – இங்கிலாந்து இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண டிக்கெட் வாங்கியுள்ள பார்வையாளர்கள்,மெட்ரோ ரயிலில் அதை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
இதைத்தொடர்ந்து, சென்னை கடற்கரை வேளச்சேரி மின்சார ரயில் சேவையிலும், கிரிக்கெட் ரசிகளின் வசதிக்காக, ரயில் சேவைகளில்மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக, தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டல நிர்வாகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை கடற்கரை- வேளச்சேரி, வேளச்சேரி- சென்னை கடற்கரை EMU ரெயில் சேவையில் சில மாற்றம் செய்யப்படுகிறது.
41086 என்ற ரெயில் வேளச்சேரியில் இரவு 10 மணிக்கு புறப்படும். சேப்பாக்கம் நிலையத்திற்கு 10.27 நிமிடத்திற்கு வந்தடையும். 10 நிமிடங்கள் சேப்பாக்கம் நிலையத்தில் ரெயில் நிற்கும்.
பின்னர் 10.37 மணிக்கு புறப்பட்டு செல்லும் 10.52 மணிக்கு சென்னை கடற்கரை சென்றடையும்.
41083 என்ற ரெயில் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமாக இரவு 9.50 மணிக்கு புறப்படும். அதற்குப் பதிலாக இரவு 10 மணிக்கு புறப்படும். சேப்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு இரவு 22.10 மணிக்கு வந்தடையும். வேளச்சேரிக்கு இரவு 10.45 மணிக்கு சென்றடையும்.
41085 என் ரெயில் வழக்கமாக சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்படும். தற்போது இரவு 10.30 மணிக்கு புறப்படும். சென்னை சேப்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு 22.40 மணிக்கு வந்தடையும். இரவு 11.15 மணிக்கு வேளச்சேரி சென்றடையும்.
வேளச்சேரியிலிருந்து ஜன.25 இரவு 10 மணிக்கு புறப்படும் வேளச்சேரி – சென்னை கடற்கரை எமு ரயில்(வ. எண்: 41086) சேப்பாக்கம் ரயில் நிலையத்தில், இரவு 10.27 வரை 10.37 வரை 10 நிமிடங்கள் நின்று செல்லும் .
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25ந்தேதி சென்னையில் 2-வது டி20 போட்டி: சென்னை மெட்ரோ ரயிலில் இலவச பயணம் அறிவிப்பு….