சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் ஜனவரி 25 அன்று 2-வது டி20 போட்டி நடைபெறும் நாளில், சென்னை மெட்ரோ ரெயிலில்  கிரிக்கெட் போட்டியை காண டிக்கெட் எடுத்துள்ள ரசிகர்கள், அதை காட்டி  இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகள் 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது.  ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது

அதன்படி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை (ஜனவரி 23) நடைபெறவுள்ளது

இதனையடுத்து 2 ஆவது டி20 போட்டி வரும் 25 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் வரும் 25ம் தேதி நடக்கும் இந்தியா – இங்கிலாந்து இடையிலான 2-வது டி20 போட்டியைக் காண வரும் ரசிகர்கள் மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

அன்றைய நாளில், கிரிக்கெட் போட்டியை காண எடுக்கப்பட்டுள்ள டிக்கெட்டைக் காட்டி மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணம் செய்யலாம். அதாவது கிரிக்கெட் போட்டியை காண எடுக்கப்பட்டுள்ள டிக்கெட்டுகளை மெட்ரோ ரயில் நிலையங்களில்  காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் என தெரிவித்து உள்ளது.

இந்த போட்டியில்,  இந்திய அணியா சூர்யகுமார் யாதவ் தலைமையில்  களமிறங்கவுள்ளதுடன் இறுதியா நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது