மீண்டும் சென்னை கமிஷனர் ஆனார் டி.கே.ராஜேந்திரன்.

Must read

தேர்தல் நேரத்தில் மாற்றப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் மீண்டும் அவரவர் இடத்திற்கு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள்.
13245471_1221845391173750_7652418208309385945_n
தமிழகத்தில் தற்போது மொத்தம்  17 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை காவல் ஆணையராக இருந்த டி.கே.ராஜேந்திரன் மாற்றப்பட்டு அஷுதோஷ் சுக்லா நியமிக்கப்பட்டார், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி திரிபாதி மாற்றப்பட்டு அந்த பொறுப்புக்கு கடலோர காவல் குழும ஏடிஜிபி சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டார்.
உளவுத்துறை ஏடிஜிபியாக கரன்சிஹா நியமிக்கப்பட்டார்.
தற்போது சென்னை மாந்கர ஆணையராக மீண்டும் டி.கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார், தற்போதைய ஆணையர் அஷுதோஷ் சுக்லா அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக திரிபாதி மீண்டும் நியமிக்கப்பட்டார். தற்போதைய கூடுதல் டிஜிபி சைலேந்திர பாபு மீண்டும் கடலோர காவல் குழும ஏடிஜிபியாக மாற்றப்பட்டார்.  உளவுத்துறை ஐஜி யாக சத்திய மூர்த்தி மீண்டும் மாற்றப்பட்டார். தற்போதைய உளவுத்துறை ஏடிஜிபி கரன்சின்ஹா சிபிசிஐடி ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
 
 

More articles

Latest article