சென்னை: தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளம்பெண் சுவாதி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு, தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட ராம்குமார், மின்சாரத்தினால் இறக்கவில்லை என்று உடற்கூறாய்வு தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சுவாதி கொலை வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராம்குமார் காவல்துறையினரால் சிறையில் கொல்லப்பட்டாரா என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் எப்படி இறந்தால்? சிறைச்சாலையில், காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்டாரா? அவரது மரணம் எப்படி நிகழ்ந்தது எனசமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
சுவாதி கொலை கைதி: சிறையில் ராம்குமார் தற்கொலை!
இதுதொடர்பாக காவல்துறையினர், ராம்குமார் ஸ்வாதியை ஒரு தலையாக காதலித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அது குறித்து வேறெந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனால் ராம்குமார் கைது செய்யப்பட்டதிலும் சர்ச்சை கிளம்பியது.
சுவாதியை தான் கொலை செய்யவில்லை : ராம்குமார் ஜாமின் மனு தாக்கல்!
சுவாதியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு, தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட ராம்குமாரின் உடலை உடற்கூறாய்வு செய்த மருத்துவர்கள் 2 பேர் மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். அவர்களின் வாக்குமூலம் வருமாறு,
சுவாதி, வெளிநாட்டு உளவாளியா? : ராம்குமார் தாயார் அதிர்ச்சி புகார்
எங்களது பரிசோதனை அறிக்கையில், மூளை திசு பரிசோதனை செய்ததில் நல்ல நிலையில் இருந்தது. இதய திசுக்களை பரிசோதனை செய்ததில் அதுவும் நல்ல நிலையில் இருந்தது. நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், மேலுதடு, கீழுதடு, சிறுநீரகம் போன்றவற்றின் திசுக்களை பரிசோதனை செய்ததிலும், அவர் உடலில் மின்சாரம் பாய்ந்ததற்கான அறிகுறிகள் தென்படவில்லை. அனைத்து உறுப்புகளும் நல்ல நிலையில் இருந்ததாக சான்று வழங்கி இருக்கிறோம். அதற்காக நாங்கள் வழங்கிய சான்று நகல் தான் சி4 ஆகும் என்று அதை காண்பித்துள்ளனர்.
இந்த விவகாரம் தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. உண்மையிலேயே சுவாதியை கொலை செய்தது ராம்குமார்தானா? அப்படியென்றால் அதற்கான ஆதாரங்களை காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லையே ஏன்? ராம்குமார் மின்சாரம் தாக்கி உயிரிழந்தாக காவல்துறையினர் கூறிய நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை, அவரது மரணம் மின்சாரத்தில் நடைபெறவில்லை என்று தெரிவித்து உள்ளது. அப்படியென்றால், ராம்குமார், சிறையில் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டரா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை சமூக ஆர்வலர்களும், நெட்டிசன்களும் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர்.
சுவாதி கொலை முதல் ராம்குமார் மரணம் வரை..: ஒரு டீட்டெய்ல் ரிப்போர்ட்..