டில்லி

ரானில் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா அனுமதிக்க வேண்டும் என அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ கேட்டுக் கொண்டுள்ளார்.

அமெரிக்காவுக்கு ஈரானுக்கும் இடையிலான அணு ஆயுத ஒப்பந்தம் முறிந்ததன் விளைவாக அமெரிக்கா பல உலக நாடுகளுக்கு ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை விதித்தது. இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா நாளை வரை கெடு அளித்துள்ளது. அதன் பிறகு ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு பொருளாதார தடை விதிக்க உள்ளதாக அறிவித்தது.

இந்தியா பெருமளவில் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. அமெரிக்கா  அளித்துள்ள அந்த கெடு நாளை அதாவது மே மாதம் 2 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அமெரிககாவின் உத்தரவுப்படி ஈரான் நாட்டில் இருந்து இறக்குமதி நிறுத்தப்பட்டால் இந்தியாவில் கடும் எரிபொருள் பஞ்சம் ஏற்படும்.

அதை ஒட்டி அமெரிக்க அரசு செயலர் மைக் பாம்பியோ உடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசி உள்ளார். அப்போது அவர் மே மாதம் 2 ஆம் தேதிக்கு மேலும் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அமெரிக்கா எவ்வித முடிவும் தெரிவிக்கவில்லை.