சுஷாந்த்தின் கடைசி படத்தை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்.. சூப்பர் ஸ்டார் ரசிகரான ஹீரோ..

Must read

றைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படம் தில் பெச்சாரா ஜூலை 24 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளி யிடப்பட்டது, மேலும் ரசிகர்களை மிகவும் உணர்ச்சிவசப்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் தீவிர ரசிகராக நடித்திருக் கிறார் . ஹீரோயின் சஞ்சனா சங்கி ஒரு எலும்பு புற்றுநோயாளியாக நடித்திருக்கிறார்.
சுஷாந்த் ரஜினியை போலவே நடிகராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார் . சுஷாந்த்தின் பாட்டியாக வருபவர் தமிழி லும் பேசுகிறார், ஆனால் சுஷாந்த் ஒரு தமிழர் என்று படத்தில் காட்டப்பட வில்லை. ரஜினிகாந்த் படங்களில் சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்ட் வரும்போது வரும் இசையை இப்படத்தில் சுஷாந்துக் காக இணைத்திருக்கிறார்கள்.

நான் ரஜினிபோல் ஆக வேண்டும். வில்லனை அடிக்கணும், கதாநாயகியைக் காப்பாற்ற வேண்டும் என்று சுஷாந்த் 100 சதவீதம் ரஜினி ரசிகராகவே படத்தில் மாறியிருக்கிறார்.
ரஜினியை பாருங்கள் அவர் ஒன்றை தொடங்குகிறார் இரண்டை முடிக்கிறார் என்று சுஷாந்த் வசனம் பேசுகிறார். இதெல்லாம் ரஜினி ரசிகர்களை பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அவர்கள் சுஷாந்த்தையும் தில் பெச்சாரா படத்தையும் கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள்.

More articles

Latest article