பீகார் அரசின் பரிந்துரையைத் தொடர்ந்து நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (Sushant Singh Rajput) மரணத்தில் சிபிஐ (CBI) விசாரணை தொடங்கியுள்ளது.

தற்கொலை, கிரிமினல் சதி, மோசடி மற்றும் சுஷாந்தின் குடும்பத்தினர் தாக்கல் செய்த பிற குற்றச்சாட்டுகளும் இதில் அடங்கும்.

இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட ரியா சக்ரவர்த்தியை தனது முன் ஆஜராகுமாறு ED அழைப்பு விடுத்துள்ளது. ரியா ஆகஸ்ட் 7 ஆம் தேதி ED முன் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஷோவிக் ஆகியோர் 15 கோடி மோசடி செய்ததாக சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங் குற்றம் சாட்டியுள்ளார். இதைக் கருத்தில் கொண்டு, ரியா சக்ரவர்த்திக்கு எதிராக தனிநபர் பண மோசடி சட்டம் (PMLA) மீது ED வழக்கு பதிவு செய்துள்ளது.

இதற்கிடையே புதன்கிழமை பாஜக எம்.பி.யும் மகாராஷ்டிரா தலைவருமான நாராயண் ரானே சுஷாந்த் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறினார். சுஷாந்திற்கு முன்பு, அவரது மேலாளர் திஷா சாலியனும் இதே முறையில் கொல்லப்பட்டார் என்று கூறியுள்ளார் .

தனக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எந்த காரணமும் இல்லாமல் இலக்கு வைக்கப்படுவதாக ஆதித்யா தாக்கரே முதன்முறையாக வாயை திறந்துள்ளார் .

இந்த வழக்கில், மும்பை காவல்துறை விபத்து மரண அறிக்கையை தாக்கல் செய்தது, இதுவரை 56 பேரின் அறிக்கைகளை பதிவு செய்துள்ளது. பாலிவுட் இயக்குனர் ஆதித்யா சோப்ரா, மகேஷ் பட், சஞ்சய் லீலா பன்சாலி, ரியா சக்ரவர்த்தி மற்றும் சுஷாந்த் ராஜ்புத் ஆகியோரின் சகோதரிகள் இவர்களில் அடங்குவர்.