சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்தின் டீசர் வெளியானது

யக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் என்ஜிகே. இந்த படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது.

என்ஜிகே படத்திற்கு தணிக்கைக்குழு ‘யு’ சான்றிதழ் வழங்கிய நிலையில் படத்தின் டீசர் இன்று காலை வெளியிடப்பட்டது.  இந்த டீசர் சூர்யா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

நந்த கோபால குமரன் என்ற பெயரின்  சுருக்கம்தான் என்ஜிகே. இந்த படத்தை செல்வராகவன் இயக்க, ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு  யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக   ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய்பல்லவி நடித்துள்ளனர். இவர்களுடன்  மன்சூர் அலிகான், பாலாசிங் எனப் பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்த்தி நிலையில், செல்வராகவன் உடல்நிலை பாதிப்பு காரணமாக படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து இருப்பதால், காதலர் தினமான இன்று படத்தின் டீசர் வெளி யிடப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: NGK Teaser Released, Surya's NGK Movie, என்ஜிகே, என்ஜிகே டீசர், சூர்யா, சூர்யா படம், செல்வராகவன்
-=-