காதலர் தினமான இன்று தங்களது திருமணத்தை உறுதி செய்த ஆர்யா சாயிஷா

Must read

இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரபல நடிகர் ஆர்யாவும், நடிகை சாயிஷாவும் தங்களது திருமணத்தை உறுதி செய்து, இணைந்து  அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

பிரபல நடிகரான ஆர்யாவுக்கும்  கஜினிகாந்த படத்தின் நாயகியு மான சாயிஷா சைகல் இடையே திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இவர்களின்  திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்ட தாகவும் மார்ச் 9ந்தேதி திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன.

ஆனால், இதுகுறித்து ஆர்யா தரப்பில் இருந்தோ, சாயிஷா தரப்பில் இருந்தோ எந்தவித அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் வாலன்டைன்ஸ்டேயான இன்று ஆர்யா சாயிஷா ஆகிய இருவரும் இணைந்து, தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். தங்களது பெற்றோர்களின் ஆசியால் தங்களது வாழ்க்கையை பகிர்ந்துகொள்ள இருப்பதாகவும், மார்ச் மாதம் தங்களுக்கு திருமணம் என்பதையும் சந்தோஷத்துடன்  தெரிவித்து உள்ளனர்.

More articles

Latest article