சென்னை: சென்னை மாநகராட்சி வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவை  சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், மனுதாரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சேர்ந்த 12,838 வார்டு களுக்கு பிப்ரவரி மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி தேர்தலிலையொட்டி, முறைகேடுகளை தடுக்கும் வகையில், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை மையங்களில் முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சதீஷ்குமார் என்பவர் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், ஏற்கனவே புறப்பித்த உத்தரவுகளை ஆய்வு செய்யாமல், மனுதாரர் நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக கூறி, மனுதாரர் சதிஷ்குமாருக்கு  ரூ.5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவு பிறப்பித்தது.