சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நடிகர் சூர்யாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடது கையில் காயம் ஏற்பட்டதாகவும் ,தற்போது கொஞ்சம் கொஞ்சமாக காயத்தில் இருந்து குணமாகி வருவதாகவும் செய்திகள் வெளியாகியது. ஒரு புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த செய்தியை பார்த்த சூர்யாவின் ரசிகர்கள் சூர்யா விரைவில் குணமாக வேண்டும் என பிரார்த்தனை செய்து வருவதாக தெரிவித்து வந்தனர்.
ஆனால் உண்மையில் சூர்யாவுக்கு அந்த அளவுக்கு காயம் ஏற்படவே இல்லை. சூர்யா சென்ற வாரம் தனது வீட்டில் உள்ள ஜிம்மில் ஒர்கவுட் செய்து கொண்டிருந்தாராம். அப்போது கையில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து கொண்டாராம். அந்த சிறிய காயத்தை பற்றிய செய்தியைத்தான் தான் யாரோ சிலர் பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு சூர்யா நடக்க முடியாத நிலையில் இருக்கிறார் என வதந்தி பரப்பியுள்ளனர்.