நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரித்த படம் ‘பொன்மகள் வந்தாள்’. இதில் ஜோதிகா, கே.பாக்யராஜ், பாண்டியராஜன். பிரதாப் போத்தன். பார்திபன். தியாகராஜன் நடித்திருந்தனர். இப்படத்தை ப்ரட்ரிக் இயக்கி இருந்தார்.


பொன்மகள்வந்தாள் படம் ஒடிடி தளத்தில் வெளியானது. பட இயக்குனருக்கு நடிகர் சூர்யா விலை உயர்ந்த லேப்டாப் பரிசளித்தார். அத்துடன் மேலும் சில பரிசுகள் அளித்தார்.
கிஃப்ட் கொடுத்த சூர்யாவுக்கு டைரக்டர் ப்ரட்ரிக் நன்றி தெரிவித்திருக்கிறார். ’இதுவரை நான் பெற்ற பரிசுகளில் இது மிகச் சிறந்த பரிசு. அதற்காக நன்றி. எனது சந்தோஷத்தை வெளிப் படுத்த வார்த்தைகள் மட்டும்போதாது’ என குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னதாக சூர்யா ஜோதிகா குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
#