சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.90 கோடி போலி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக  3 பேர் கைது செய்யப்ப ட்டு உள்ளது. சமீப காலங்களில் கைப்பற்றப்பட்ட போலி நோட்டுகளில் இது  மிகப்பெரியது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

செப்டம்பர் 29 முதல் சூரத் மற்றும் ஜாம்நகரில் தயாரிக்கப்பட்ட கிட்டத்தட்ட ரூ.100 கோடி மதிப்புள்ள போலி இந்திய ரூபாய் நோட்டுகளை சூரத்  காம்ரேஜ் பொலிசார் கைப்பற்றி உள்ளனர். ஒரு குழு, இந்த பணத்தை நேரடியாக சந்தையில் புழக்கத்தில் விடுவதற்குப் பதிலாக ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் மக்களை ஏமாற்றும் வகையில் இந்த பணத்தை எடுத்துக்கொண்டு சென்றபோது இந்த பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது.

முதலாவதாக, செப்டம்பர் 29-ம் தேதி காம்ரேஜில் கொட்டாடியா என்பவர் ஓட்டிச் சென்ற ஆம்புலன்சில் இருந்து ரூ.25.80 கோடி முக மதிப்புள்ள நோட்டுகளை மீட்ட போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அதைத்தொடர்ந்து, கடந்த சனிக்கிழமையன்று, ஜாம்நகரின் கலாவாட் தாலுகாவில் உள்ள அவரது சொந்த ஊரான மோட்டா வடலாவில் இருந்து அதிக ரூபாய் நோட்டுகள், கிட்டத்தட்ட 53 கோடி ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சனிக்கிழமையன்று, ஜாம்நகரின் கலவாட் தாலுகாவில் உள்ள அவரது சொந்த மோட்டா வடலாவில் இருந்து அதிக கரன்சி நோட்டுகள், கிட்டத்தட்ட 53கோடி ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன, மேலும் கைது செய்யப்பட்ட மற்றொரு குற்றவாளியான ஆனந்தை சேர்ந்த விபுல் படேல் (49) என்பவரிடமிருந்து 12கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.  இந்த போலி நோட்டுக்கள் தொடர்பாக சூத்திரதாரி ஹிதேஷ் கோடாடியா உட்பட மூவரைக் கைது செய்தனர்.

இதுகுறித்து கூறிய ஜாம்நகர் டிஎஸ்பி பிரேம்சுக் தேலு, மொத்தம் ரூ.90 கோடி FICNஐ போலீசார் மீட்டுள்ளனர், “மொட்டா வடாலாவில் உள்ள கோடடியாவின் மூடிய மூதாதையர் வீட்டை நாங்கள் சோதனை செய்தோம், பின்னால் ஒரு குடோன் இருந்தது. நிலக்கடலை உமிகளுக்கு அடியில் 19 பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன, அனைத்திலும் FICN இருந்தது.” அசல் நாணயத்தில் உள்ள 17 டையாளக் குறிகளில், 14மட்டுமே இந்த நோட்டுகளுடன் பொருந்தியது. அவர்களிடமிருந்த தொகையின் பொறிக்கப்பட்ட எண்கள் இல்லை, வெள்ளி நூல் காணாமல் போனது மற்றும் ‘ரிவர்ஸ் பேங்க் ஆஃப் இந்தியா’ என்று எழுதப்பட்டிருந்தது என்று கூறியவர்,

கோடாடியா திக்ரி அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி, வரிச் சலுகைகளைப் பெறுவதற்காக வங்கிகள் மூலம் நன்கொடை அளிக்க விரும்புவோருக்கு பணமாக இந்த கள்ள நோட்டு பணத்தை வழங்கியதாகவும்,  அவர்கள் உண்மையான தொண்டு இல்லாமல் வரிச் சலுகைகளைப் பெற விரும்பியே இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

மொத்தம் ரூ.90 கோடி FICNஐ போலீசார் மீட்டுள்ளதாகவும், மேலும் ரூ.10 கோடி முகமதிப்பு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறிய சூரத் ரேஞ்ச் கூடுதல் டிஜிபி ராஜ்குமார் பாண்டியன்,  பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பணம் தருவதாக ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் மக்களை ஏமாற்றும் மோசடியை நடத்தி வந்துள்ளதும்,  “மோசடியால் பாதிக்கப்பட்ட சிலர் காவல்துறையை அணுகவில்லை, ஏனெனில் அவர்களின் அசல் திட்டமும் ஒரு வகையான மோசடியாகும், ஏனெனில் அவர்கள் உண்மையில் நன்கொடை அளித்ததைக் குறிப்பிட்டனர், ஆனால் வரி விலக்கு பெறுவதற்கு ஒரு பரிவர்த்தனையை மட்டுமே காட்ட விரும்பினர்,” என்றும் கூறினார்.

இந்த மோசடி மற்றும் கள்ளநோட்டு தொடர்பாக, கோட்டாடியா மற்றும் படேல் ஆகியோருடன், அவர்களது கூட்டாளியான தினேஷ் போஷியா (40) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.