சூரத்

சூரத் நகர மயானத்துக்கு வரும் சடலங்களில் மூன்றில் ஒரு பங்கு கொரோனா மரண சடலங்கள் என்பதால் மற்ற சடலங்கள் காத்திருக்க வேண்டி உள்ளது.

சூரத் நகரில் உள்ள முக்கிய மயானங்கள் ராம்நாத் கேலா மயானம், குருஷேத்திரா மயானம், அஸ்வினி குமார் மயானம் ஆகியவை ஆகும்.  இதில் வாரத்துக்கு ராம்நாக் கேலா மயானத்தில் சராசரியாக 31 சடலங்களும் குருஷேத்திராவில் 23 சடலங்களும், அஸ்வினி குமார் மயானத்தில் 70 சடலங்களும் எரிக்கப்படுகின்றன.

தற்போது கொரோனா மரணங்கள் சூரத் நகரில் அதிகரித்து வருகின்றன.  அவ்வகையில் ராம்நாத் கேலாவில் கடந்த வாரம் மட்டும் 31 சடலங்களில் 6 கொரோனா மரண சடலங்களாகும்.  இதைப் போல் குருஷேத்திராவில் 23 சடலங்களில் 8 கொரோனா மரணங்கள் ஆகும்.  அஸ்வினி குமார் மயானத்தில் எத்தனை கொரோனா மரண சடலங்கள் எரியூட்டப்பட்டன எனத் தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்

இந்த சடலங்கள் பிபிஇ உடைகளுடன் எடுத்து வரப்படுகின்றன.  இவ்வாறு எடுத்து வரப்படும் சடலங்கள் முதலில் எரியூட்டப்பட்டு அதன் பிறகு மற்ற சடலங்கள் எரியூட்டப்படுகின்றன.  கொரோனா மரண அதிகரிப்பால் மற்ற சடலங்களை எரியூட்ட உறவினர்கள் வெகு நேரம் காத்திருக்க நேரிடுகிறது.  இதனால் மக்கள் சடலங்களுடன் காத்திருக்கும் அவல நிலை ஒவ்வொரு மயானத்திலும் காணப்படுகிறது.