கேள்வியின் நாயகனே… இந்த கேள்விக்கு பதிலேதய்யா? : உச்சநீதி மன்றத்தை நாடும் சசிகலா புஷ்பா?

Must read

டில்லி:
ன்று பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் ஜி.எஸ்.டி. மசோதா குறித்து மேலவை எம்.பி. சசிகலா புஷ்பா எந்த மாதிரி முடிவு எடுக்கிறார் என்பதை பொறுத்து அவரது பதவி நிலைக்குமா, பறிக்கப்படுமா என்பது முடிவாகும்.
இன்று பாராளுமன்றத்தில் ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) மசோதா கொண்டுவரப்படுகிறது.  சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மேலவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, இம் மசோதாவை ஆதரிப்பாரா எதிர்ப்பாரா என்பது குறித்து பலவித கேள்விகள் எழுந்துள்ளன.
காரணம், கட்சியில்இருந்து நீக்கப்பட்டாலும், அக் கட்சி கொறடாவின் உத்தரவை எம்.பி. மீறக்கூடாது. மீறினால் பதவி பறிக்கப்படும் என்று 1996ல் உச்ச நீதிமனறம்  தீர்ப்பளித்தது.
பிறகு 2010ம் ஆண்டில் சமாஜ்வாடி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அமர்சிங், ஜெயப்பிரதா ஆகியோர் “1996ம் ஆண்டு தீர்ப்பு தங்களுக்கு பொருந்துமா” என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.  இது குறித்து ஆராய நீதிபதி ரஞ்சன் தலைமையில் அமர்வு ஏற்படுத்தப்பட்டது.
sasikala-pushpa
இந்த அமர்வு, “அப்போது கேள்விகளை எழுப்பிய அமர்சிங், ஜெயப்பிரதா ஆகியோரின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. ஆகவே அக் கேள்விகளுக்கு எங்களால் பதில் அளிக்க முடியாது. அக் கேள்விகள் அப்படியே இருக்கின்ற” என்று இன்று தீர்ப்பளித்தது.
ஆகவே இன்று ஜி.எஸ்.டி. மசோதா தாக்கலாகும்போது, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாபுஷ்பா, அதிமுக கொறடாவான நவநீதகிருஷ்ணன் உத்தரவை செயல்படுத்த வேண்டுமா அல்லது தன் விருப்பத்துக்கு சுதந்திரமாக செயல்படலாமா என்ற சட்ட ரீதியான குழப்பம் நிலவுகிறது.
இது குறித்து சட்டவல்லுனர்கள் தெரிவிக்கையில், “தற்போது 1996ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படியே நடக்கவேண்டியிருக்கிறது. ஏனென்றால் இது குறித்து ஆராய்ந்த நீதிபதி அமர்வு பதில் அளிக்க மறுத்துவிட்டது. அதே நேரம் சசிகலாபுஷ்பா உயர்நீதிமன்றத்தை நாடினால், அவர் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை கிடைக்க வாய்ப்பு உண்டு” என்று தெரிவித்தனர்.
ஆகவே, 2020ல் தனது பதவிக்காலம் முடியும் வரை மக்கள் பணி ஆற்றுவேன் என்று உறுதிபட தெரிவித்துள்ள சசிகலாபுஷ்பா, உச்சநீதிமன்றத்தை நாடுவார் என்று கூறப்படுகிறது.

More articles

Latest article