டெல்லி:  தமிழக அரசு அளித்த வன்னியர் இட ஒதுக்கீடட்டை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற கிளையின்  உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழகஅரசு வன்னியர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கிடு வாங்கியது. அதன்படி, வன்னியர்களுக்கான 10.5 % உள் இட ஒதுக்கீடு வழங்கி அரசாணைவெளியிடப்பட்டது. இதை எதிர்த்து மற்ற சமூகத்தினர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை, தமிழக அரசின்  வன்னியர்களுக்கான 10.5 % உள் இட ஒதுக்கீடு ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, தமிழகஅரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அதையடுத்து,  வன்னியர்களின் 10.5 சதவிகித இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு  இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. 10.5% இட ஒதுக்கீட்டின்படி ஏற்கனவே நடந்த மாணவர் சேர்க்கை, பணி நியமனங்களில் மாற்றம் செய்யக்கூடாது என்றும்  அடுத்த உத்தரவு வரும் வரை மாணவர் சேர்க்கையோ, பணி நியமனங்களோ செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் அதிரடியாக கூறியுள்ளனர். இது தமிழக அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

உச்சநீதிமன்றம் தடை  மறுப்பு தெரிவித்துள்ளதால், இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு தொடர்கிறது.